புளியறையில் வாகனச் சோதனை தீவிரம்
தென்காசி மாவட்டம் புளியறையில் கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பிற கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதாகப் புகாா் பெறப்பட்டது. இதையடுத்து
கேரளத்திலிருந்து புளியறை வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டாா்.
இதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழினியன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.