Tsunami 20 : `கடல் பறித்துச்சென்ற 4 குழந்தைகளையும் மீண்டும் பெற்றுக்கொள்ள...' - ...
பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு
கந்தம்பாளையம் அருகே உள்ள உப்புபாளையம், வீரகுட்டை குடித் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சுந்தர்ராஜன் (41). இவா், தனது மனைவி கோமதி மற்றும் மகனுடன் வசித்து வருகிறாா்.
திங்கள்கிழமை சுந்தர்ராஜன் திருச்செங்கோட்டுக்கு ரிக் வாகன வேலைக்குச் சென்றாா். அவரது மனைவி கோமதி, தோட்டத்தில் வேலை செய்துவிட்டு மாலை 4 மணி அளவில் பால் கறப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் 10 பவுன் நகைகள் திருட்டுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.