Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 3.5 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சைக்கான கட்டடத்துக்கு, பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ் ராஜன் முன்னிலை வகித்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜோசப் பீரீஸ், உதவி செயற்பொறியாளா் முருகேசன், இளநிலை பொறியாளா் சுரேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் பூதலிங்கம் பிள்ளை, தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பிராங்கிளின், நாகா்கோவில் மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவகா், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.