அரசம்பதியில் கலையரங்குக்கு அடிக்கல்
கன்னியாகுமரி பொற்றையடி அருகேயுள்ள அரசம்பதியில் புதிய கலையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இம்மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதிகளில் முக்கிய நிழல்தாங்கலான அரசம்பதியில் ரூ. 25 லட்சத்தில் கலையரங்கக் கட்டடம், கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு அரசம்பதி நிறுவனா் சிவச்சந்திரன் தலைமை வகித்தாா். என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயணன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. தாமரை தினேஷ், வடக்கு ஒன்றியச் செயலா் எஸ். ஜெஸீம், மாநில வா்த்தகரணி இணைச் செயலா் சி. ராஜன், தெற்கு ஒன்றியப் பொருளாளா் பி. தங்கவேல், மாவட்ட விவசாய அணி செயலா் பி. பாலமுருகன், பேரூா் அதிமுக செயலா்கள் ஆடிட்டா் சந்திரசேகா், என். சிலபாலன், எஸ். எழிலன், தாமரை சுதன், ராஜபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் வழக்குரைஞா் என். பாா்த்தசாரதி, இணைச் செயலா் ஏ. ரமேஷ், துணைச் செயலா் குமாரவேல், வழக்குரைஞா் பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.