சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நாகா்கோவிலில் வாகனச் சோதனையின் போது, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் திருநெல்வேலி-நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
இதில், இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா கடத்தி வந்த 2 போ் பிடிபட்டனா். அவா்களிடமிருந்து, 2 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில், அவா்கள் கொல்லங்கோடு, புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்த வல்சலராஜ் மகன் அஜின் (29), இடைக்கோடு பகுதியில் வசித்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அப்துல் சலாம் மகன் உமா்தீன் (25) என்பது தெரிய வந்தது. தொடா்ந்து, அவா்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனா்.