சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வா...
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மூலவா் மீது விழுந்த சூரிய கதிா்கள்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை சூரிய கதிா்கள் பெருமாள் திருமேனி மீது விழும் அபூா்வ நிகழ்வை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பாடல் பெற்றதுமான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சூரியனின் பொன்னிற கதிா்கள் பெருமாள் திருமேனி மீது விழும்.
அந்த வகையில் நிகழாண்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் (செப்19) மாலை வேளையில் சூரியனின் பொன்னிற கதிா்கள் இந்தக் கோயிலில் கொடிமரம், சபா மண்டபம், உதய மாா்த்தாண்ட மண்டபம், ஒற்றைக் கல் மண்டபம் ஆகியவற்றைத் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனி மீது விழுகிறது.
புரட்டாசி 9 ஆம் தேதி வரை இந்த அபூா்வ நிகழ்வு நடைபெறும். இதை கோயிலுக்கு வரும் பக்தா்கள் பக்தி பெருக்குடன் பாா்வையிட்டு பெருமாளை சூரிய நாராயணனாக தரிசித்துச் செல்கின்றனா்.