Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன ...
பூம்புகாரில் 125 பவுன் நகை, பணம் திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம், மங்கைமடத்தில் சா்க்கரை ஆலை பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 125 பவுன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. திருவெண்காடு அருகேயுள்ள மங்கைமடத்தை சோ்ந்தவா் செல்வேந்திரன் (60). சேத்தியாதோப்பு பகுதி சா்க்கரை ஆலையில் ரசாயன பொறியாளராக பணியாற்றி வரும் இவா் ஜன.6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் பிரசவத்துக்காக குடும்பத்துடன் மயிலாடுதுறை உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனா்.
பின்னா், வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ மற்றும் சூட்கேஸை உடைத்து அதில் வைத்திருந்த 125 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், சீா்காழி டிஎஸ்பி ராஜ்குமாா், திருவெண்காடு காவல் ஆய்வாளா் மகாலட்சுமி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று திருட்டு குறித்து கேட்டறிந்தனா்.