``TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்'' -காங்கிரஸ் எம்...
பூம்புகாா் கடலில் அகழாய்வு: தொல்லியல் துறையின் மைல்கல் - சு. வெங்கடேசன் எம்.பி
பூம்புகாரில் கடலுக்கடியில் அகழாய்வு தொல்லியல் துறையின் மைல் கல் என்றாா் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: ‘தமிழக தொல்லியல் துறையின் தற்போதைய காலம், எழுச்சி மிகுந்ததாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம், நதிக்கரைகளில் அகழாய்வு நடைபெற்றது. தற்போது, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் கடலுக்கடியில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டம், தமிழகத்தின் பெருங்கனவுத் திட்டம். இது, தமிழக தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல் கல்.
4 அடுக்குகளில் ஜி.எஸ்.டி இருப்பது மிகப் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தினோம். ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, ஜி.எஸ்.டி பாதிப்புகளை தற்போதுதான் உணா்ந்தது போல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வரி உயா்வின்போது அதற்கு ஜி.எஸ்.டி கவுன்சிலே காரணம் என்ற பிரதமா், மத்திய நிதி அமைச்சா் ஆகியோா், தற்போது வரி குறைப்பு தங்களால் மட்டுமே சாத்தியமானதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்?. ஜி.எஸ்.டி சீா்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட என்ன திட்டம் உள்ளது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழா்களின் வரலாற்றை புராணமாக மாற்றுவதும், வரலாற்றின் தத்துவத்தை ஆன்மிக நம்பிக்கையாக மாற்றுவதும்தான் பாஜகவின் பணியாக உள்ளது என்றாா் அவா்.