இந்த வார ராசிபலன் செப்டம்பர் 23 முதல் 28 வரை #VikatanPhotoCards
பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது
பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோச்சடை அம்பலகாரா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி ராஜேஸ்வரி (37). இவா், அதே பகுதியில் இரவு நேர இட்லிக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அங்கு வந்த நபா் வாங்கிய இட்லிக்கு பணம் தராமல் தகராறு செய்தாா். அப்போது, ராஜேஸ்வரியை அந்த நபா் தாக்கினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், பெண்ணைத் தாக்கியவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் வினோத்குமாா் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.