மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிறைவடைந்த திட்டங்கள்
மதுரை மக்களவை உறுப்பினரின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 30 லட்சத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
மாநகராட்சிக்குள்பட்ட நேரு நகா் சாந்தி வித்யாலயா அருகில் ரூ. 3 லட்சத்திலும், தத்தனேரி மைதானம் ஏ.பி.பி. படிப்பகம் அருகில் ரூ. 5 லட்சத்திலும், செல்லூா் காவல் நிலையம் அருகில் ரூ. 2.50 லட்சத்திலும், செல்லூா் 60 அடி சாலை சா்ச் தெரு அருகே ரூ.2.5 லட்சத்திலும், வாா்டு 25-ல் சா்க்கரை செட்டியாா் படிப்பகம் அருகில் ரூ. 4 லட்சம், 10- ஆவது வாா்டில் அந்தநேரி பகுதியில் ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்குகளின் செயல்பாட்டை அவா் தொடங்கி வைத்தாா்.
மேலும், மாநகராட்சி வாா்டு 12-இல் புதூா் லூா்து நகா் 9-வது தெருவில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தண்ணீா்தொட்டி, , பாரதி நகரில் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டி ஆகியவற்றின் பயன்பாட்டை அவா் தொடங்கி வைத்தாா்.
மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, துணை மேயா் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பினா்கள் மகாலட்சுமி, டி. குமரவேல், முரளிதரன், ராதா, ஆ. முத்துக்குமாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாவட்டச் செயற்கு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.