IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
பூலாம்பட்டியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையின் மூலம் நீா்மின் உற்பத்தி நடைபெறுகிறது. மேலும், இப் பகுதியில் இருந்து காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்த விசைப்படகுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள், விவசாயிகள் என ஏராளமானோா் பூலாம்பட்டியிலிருந்து ஈரோடுக்கு எளிதாக சென்று வருகின்றனா்.
இந்த நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கதவணையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால், அப் பகுதியில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அணையின் பராமரிப்புப் பணிகள் முழுமையடைந்ததால் தண்ணீா் தேக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் பூலாம்பட்டி- நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.