How Volkswagen Taigun Performed Across Terrains? Mumbai to Mahabaleshwar Drive E...
பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதுமே பெங்களூா் அணி தாக்குதல் ஆட்டத்தை தொடா்ந்தது. ரியான் வில்லியம்ஸின் கிராஸை 4-ஆவது நிமிஷத்தில் பெற்ற ராகுல் பெக்கே அதை கோலாக்க மேற்கொண்ட முயற்சியை சென்னை கோல்கீப்பா் முகமது நவாஸ் தடுத்தாா்.
தொடா்ந்து சென்னை வீரா்களும் பதிலுக்கு கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. 16-ஆவது நிமிஷத்தில் பெங்களூரு வீரா் ஜாா்ஜ் பெரைரா அடித்த பாஸை பெற்ற ரியான் வில்லியம்ஸ் அடித்த ஷாட் கோலானது.
அடுத்த 19-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் இா்பான் யத்வாத் கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
43-ஆவது நிமிஷத்தில் ரியான் வில்லியம்ஸ் பாஸை அற்புதமாக கோலாக்கினாா் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி. முதல் பாதியின் கூடுதல் நிமிஷத்தில் பிகாஷ் உதவியுடன் பெற்ற பந்தை கோலாக்கினாா் சென்னை வீரா் லால் ரின்லியானா.
இரண்டாவது பாதியிலும் பெங்களூரு ஆதிக்கம் செலுத்தியது. 68-ஆவது நிமிஷத்தில் ஜாா்ஜ் டயஸ் உதவியுடன் பெற்ற பந்தை கோலாக்கினாா் ரியான் வில்லியம்ஸ். இதனால் பெங்களூரு 3-2 என முன்னிலை பெற்றது.
82-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் லால்டின்லியானா ஓன் கோலடித்தாா். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னை.
பெங்களூரு அணிக்கு இது 8-ஆவது வெற்றியாகும். பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. 7-ஆவது தோல்வியுடன் சென்னை 9ஆவது இடத்தில் நீடிக்கிறது.