செய்திகள் :

பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் தூதரகம் திறப்பு! - அமைச்சர் ஜெய்சங்கர்.

post image

கர்நாடக மாநிலம் பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் நாட்டுத் தூதரகம் திறக்கப்படும் என ஸ்பெயின் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள இந்தியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் விரைவில் பெங்களூரில் ஸ்பெயின் நாட்டின் தூதரகம் திறக்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இருநாட்டின் வர்த்தகமும் பெருகி வரும் நிலையில், இருநாட்டின் உறவுகளை மேம்படுத்த தூதரகம் அமைக்கப்படும் என அவர் பேசினார். மேலும், வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு இருநாடுகளும் அவர்களது கலாச்சாரத்தையும், சுற்றுலாத்துறையையும், செய்யறிவு ஆகியவற்றில் முன்னேற்றம் காணுவதற்காக இந்தாண்டு (2025) கடுமையாக உழைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

முன்னதாக, கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர்தான் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தியா வந்திருந்தார். அதன் பிறகு முதன்முறையாக தற்போது ஸ்பெயின் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மேனுவலை சந்தித்து பேசினார்.

அப்போது, இரு நாடுகளுக்கும் மத்தியிலான உள்ளூர் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து கலந்துரையாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை: தில்லியில் 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்!

புது தில்லியில் இன்று (ஜன.15) காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வான... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 15) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனையான நிலையில், வாரத் தொடக்க நாளான திங்கள்கிழம... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.76-வது இந்திய ராணுவ நாளையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்... மேலும் பார்க்க

சென்னை சங்கமம்: கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு!

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வர் ... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: 7 வீரர்கள் தகுதி நீக்கம்!

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மாட்டுப் பொங்கல் திருநாளான இன்று (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியானது 10 சுற்... மேலும் பார்க்க

மாட்டுப் பொங்கல்: பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

மாட்டுப் பொங்கலையொட்டி பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள நிலையில், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ... மேலும் பார்க்க