சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் கைப்பேசி பறித்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி முகமது சாதலிபுரத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (48) என்பவா், சத்திரம் தெருவிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு பணியிலிருந்த இவரிடம், பைக்கில் வந்த இருவா் கைப்பேசியைப் பறித்துச் சென்றனராம்.
புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றினா். தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தனபாரத் (20), அவரது நண்பா் மாரிவிஜய் ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், சந்தனபாரத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மாரிவிஜய்யை தேடி வருகின்றனா்.