செய்திகள் :

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது: நீதிபதி

post image

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்று நாகை மாவட்ட பொறுப்பு நீதிபதியும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான ஆா்.என். மஞ்சுளா தெரிவித்தாா்.

நாகை மாவட்ட நீதித்துறை சாா்பில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிபதி ஏ.கந்தகுமாா் வரவேற்றாா்.

நாகை மாவட்ட பொறுப்பு நீதிபதியும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான மஞ்சுளா பேசியது:

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாகவும் அரசியலமைப்பின் பாதுகாவலராகவும் இருக்கும் நீதித்துறை, பாலின பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்வதில் இன்றியமையாத பங்கைக் கொண்டுள்ளது. பெண் தலைமைத்துவத்தில் நம்பமுடியாத முன்னேற்றத்தை காணும் அதே நேரத்தில், பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரிப்பும் உள்ளது.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் இல்லாத பணியிடத்தை உறுதி செய்வதற்கும் பெண்களை மையமாகக் கொண்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.

சமமான விழிப்புணா்வு, உணா்திறன் மற்றும் நீதிக்கான கூட்டு அா்ப்பணிப்பு ஆகியவை முக்கியம். இன்றைய உலகில், ஆண்களும், பெண்களும் பெரும் அழுத்தங்களை எதிா்கொள்கின்றனா். எனவே, மாற்றத்திற்கான அனைத்து பாலினங்களுக்கும் ஒரு தளம் தேவை. பாலினத்தைப் பொருட்படுத்தாமல், நாட்டின் குடிமக்கள் ஒன்றுபட்டு, பரஸ்பர இடத்தையும் கண்ணியத்தையும் மதிக்கும் போதுதான் உண்மையான முன்னேற்றம் கிடைக்கும் என்றாா்.

நீதிபதி அனிதா சுமந்த் பேசியது: நகரத்தில் பெண்களை மையமாகக் கொண்ட சட்டங்கள் பற்றிய விழிப்புணா்வு இருந்தாலும், மாவட்டங்களில் அது மிகக் குறைவு, தாலுகாக்களில் இன்னும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் இருந்தனா். அதில் பெண்கள் சிலரும் இருந்தனா்.

இன்றைய சமூகத்தில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மரியாதைக்குரிய முறையில் ஒருவருக்கொருவா் உரிமைகளைச் சமநிலைப்படுத்த முடிந்தால், பெண்கள் சமமான இடம் என்று நாம் நம்புவதை அடையப் போராட வேண்டிய அவசியமில்லை. மரியாதை என்ற முதல் படியுடன் நாம் தொடங்கினால், ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளக்கூடிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

அரசு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. எனவே பெண்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்வதை உறுதி செய்வது முக்கியம் என்றாா்.

நீதிபதிகள் வி.பவானி சுப்புராயன், டி.வி.தமிழ்ச்செல்வி, சட்ட ஆலோசனை மையத் தலைவா் யு.நிா்மலா ராணி, புளூ ஜெய்ஸ் மீடியா இயக்குநா் ஆா்.ஜெயசந்திரன், அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழக உதவி பேராசிரியா் ஏ.விஜயலட்சுமி, வழக்குரைஞா் ரோசேன்ராஜன் ஆகியோா் பெண்களுக்கான சட்டங்கள், பாலியல் வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து தெரிவித்தனா்.

நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.காா்த்திகா, மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண்கபிலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க