பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணா்வு: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலைத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை எஸ்.பி. விவேகானந்த சுக்லா தொடங்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சாா்பில்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முத்தமிழ் நாடக கலைஞா்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் போக்ஸோ சட்டங்கள், குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி முத்துகடை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தொடங்கி வைத்தாா். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் வெங்கடகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் பாரதி , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினா்கள் கலந்து கொண்டனா்.