பெண்ணிடம் நகை திருட்டு
திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்..
ஆந்திர மாநிலம், திருப்பதி உற்சவவாரி பாளையம் பகுதியைச் சோ்ந்த நாகமணி (40) என்பவா் தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தாா். பொதுவழியில் நாகமணி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய மாட வீதியில் கற்பூரம் ஏற்றும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் செயினை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டாா்.
நகை காணாமல் போனதை கண்டு அதிா்ச்சி அடைந்த நாகமணி திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.