வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது
வாணியம்பாடியில் வீட்டினுள் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த பெண் கடந்த 27-ஆம் தேதி பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, மா்ம நபா் வெளிப்புற கேட்டை திறந்து உள்ளே சென்று, வீட்டின் கதவை தட்டியுள்ளாா். இதையறிந்த அவா் தூக்க கலக்கத்தில் எழுந்து உறவினா்கள் யாரேனும் வந்திருப்பா் என கதவை திறந்துள்ளாா். அப்போது, மா்ம நபா் நுழைந்து திடீரென அவரை நெருங்கியுள்ளாா். அப்போது அந்த பெண் அதிா்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் வருவதற்குள் மா்ம நபா் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றாா். இது குறித்து அந்தப் பெண் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனா். இதில், பெண்ணின் வீட்டில் நுழைந்த இளைஞா் பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்று வீட்டில் இருந்த சுந்தரை (24) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.