கொல்லிமலை, அந்தியூர் ஏரி உள்பட மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள்: திறந்துவைத...
பெண்ணை காதலித்து ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய கோவை இளைஞர் - சரமாரியாக வெட்டி கொன்ற அப்பா, மகன்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (27). இவர் கோவை துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தமிழ்செல்வனின் அம்மாவுக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான் கிராமம் பூர்விகம்.
அதனால் தமிழ்செல்வன் அந்த கிராமத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அங்கு 27 வயது பெண்ணும், தமிழ்செல்வனும் காதலித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகள் காதலித்த நிலையில், திடீரென தமிழ்செல்வன் அந்தப் பெண்ணை திருணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் தான் மற்றொரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன அந்தப் பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துள்ளார். காதல் விவகாரத்தால் தான் அவர் இறந்தார் என்ற தகவல் அறிந்து குடும்பத்தினர் தமிழ்செல்வன் மீது கோபமடைந்தனர்.
அந்தப் பெண்ணின் அப்பாவும், சகோதரரும் நேற்று கோவை துடியலூர் வந்துள்ளனர். மருத்துவமனை அருகே தமிழ்செல்வனை பின்தொடர்ந்து சென்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து துடியலூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே மாலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் அப்பா, மகன் இருவரையும் காவல்துறை கைது செய்தனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...