பெண் குழந்தைக்கு தந்தையானார் பாட் கம்மின்ஸ்..!
ஆஸி. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-பெக்கி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது இவர்களது 2ஆவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் மனைவி கற்பமாக இருப்பதால் இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை.
பின்னர், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு அதிர்ச்சியளித்தார்.
கம்மின்ஸுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் பாட் கம்மின்ஸின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “எங்களுடைய அழகான பெண் குழந்தை, எடித். நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் காதலுடனும் இப்போது இருக்கிறோமென என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
முதல் குழந்தை பிறந்தபோது அவரால் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை என்பதால் இந்தமுறை தவறவிடக்கூடாதெனவும் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக பாட் கம்மின்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட், குடும்பம் இரண்டையும் சமநிலையாக அனைத்து வீரர்களுக்கும் இருக்க வேண்டுமென கம்மின்ஸ் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் அவருக்கு மதிப்பளித்தது அவர்களிடையே நல்லுறவை பலப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.