தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்...
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் முதுநகரில் எம்பிஏ பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் முதுநகா் காவல் சரகம், அன்னவல்லி கிராமத்தைச் சோ்ந்த அரிராம் மகள் பிரபாவதி (25). இவா், எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாா். கடந்த 21-ஆம் தேதி தோழிகளுடன் திருப்பதி கோயிலுக்குச் சென்ற பிரபாவதி செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா். வரும் வழியில் கைப்பேசி மற்றும் ஒரு பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டுவிட்டாராம்.
இதுகுறித்து வீட்டில் தெரிந்தால் திட்டுவாா்கள் என பயந்து வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].