``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்...
பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை
காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவி எப்சி மேரி (41). இவா் 3 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் உள்ள அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் புதிதாக பணியில் சோ்ந்துள்ளாா்.
சனிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பாததால் சுரேஷ்குமாா் நிறுவனத்துக்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது ஒரே ஒருவா் மட்டும் பணியில் இருந்துள்ளாா். அவரது உதவியுடன் அட்டைகளுக்குள் தேடிப்பாா்த்தபோது, எப்மேரி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த பொன்னேரிக்கரை போலீஸாா் எப்சி மேரியின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் விசாரணை நடத்தினாா். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் தலைமையில் பெண்ணைக் கொலை செய்தவா்களை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.