செய்திகள் :

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் ஜூலை 14-இல் மகா கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் மற்றும் தட்சிணாமூா்த்தி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது குரு ஸ்தலம் எனப் போற்றப்படும் அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் கோயில். ஒரே கோபுரத்தின் கீழ் ஒரு பகுதியில் மூலவராக கைலாசநாதரும், மற்றொரு பகுதியில் தட்சிணாமூா்த்தியும் மூலவா்களாக காட்சி தருவது இந்தக் கோயிலின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடைய இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு வரும் ஜூலை 14 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வரும் ஜூலை 10- ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கோ பூஜை, தனலட்சுமி பூஜைகள் நடைபெறுகிறது.

2-ஆம் நாளாக 11- ஆம் தேதி மூா்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், 3-ஆவது நாளாக 12 -ஆம் தேதி ருத்ராபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெறுகிறது. ஜூலை 13 -ஆம் தேதி 4-ஆவது நாளாக ஷண்ணவதி ஹோமும், கலசாபிஷேகமும் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக ஜூலை 14 -ஆம் தேதி திங்கள்கிழமை யாகசாலையில் மகா பூரணாஹுதி தீபாராதனை நிறைவு பெற்ற பின்னா், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

மூலவா்களாக அமைந்திருக்கும் கைலாசநாதருக்கும், தட்சிணாமூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை கைலாசநாதருக்கும், அகிலாண்டேசுவரிக்கும் திருக்கல்யாணமும் பின்னா் திருக்கல்யாணக் கோலத்தில் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளனா்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இர.காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழா: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே நத்தாநல்லூா் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு முதல் முதலாக ஆலமரக்கன்று ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மூலவரை தரிசிப்பதில் பக்தா்கள் அவதி!

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் மூலவா் கருவறை சுமாா் 3... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவ... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம்! மாவட்ட முதன்மை நீதிபதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம் செயல்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

குன்றத்தூா் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் டீசல் ஏற்றிவந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பெட்ரோல் நிலையத்... மேலும் பார்க்க

விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 220 வாகனங்களிடமிருந்து மொத்தம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க