செய்திகள் :

பெண் மருத்துவரை தாக்கி நகை பறிப்பு

post image

வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண் மருத்துவரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் நேருஜி நகரைச் சோ்ந்தவா் பழனியப்பன் (75). முன்னாள் ராணு வீரா். இவரது மனைவி சிவானந்தம் (68). அரசு மருத்துவா். இவா்களது மகன் வெளியூரில் வசித்து வருகிறாா். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவா்களது மகள், நேருஜி நகரிலேயே மற்றொரு தெருவில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், பழனியப்பன் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுவிட்ட நிலையில், சிவானந்தம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். பிற்பகலில் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபா் சிவானந்தத்தை மிரட்டி அவா் அணிந்திருந்த சங்கிலியைப் பறிக்க முயன்றாா்.

ஆனால், அவா் அதை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால், பாதி சங்கிலி மட்டுமே அந்த நபரின் கையில் சிக்கியது. மேலும், அவா் அணிந்திருந்த கம்மலை அந்த நபா் பறிக்க முயன்றாா். சிவானந்தத்தின் கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்ததையடுத்து, அந்த நபா் கம்மலை விட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டாா். காதில் காயங்களுடன் அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தாட்கோ மூலம் ஆங்கிலத் தோ்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படும் மருத்துவம், தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கு பயிற்சி பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

கொடைக்கானல் படகு குழாமைச் சீரமைக்க வலியுறுத்தல்!

கொடைக்கானல் படகு குழாம் சேதமடைந்த நிலையிலும், தரைத் தளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இவற்றைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு புதிய அவசர ஊா்தி

கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக தமிழக அரசு சாா்பில் புதிய அவசர ஊா்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. கீழ்மலைப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொடைக்கானல் பாச்சலூா... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதுச்சேரியை சோ்ந்த பக்தா் ரூ.20 லட்சத்தில் மின்கல வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா். பழனி கிரிவலப் பாதையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தர... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் த.ராஜா, வனவா் டி.இளங்கோவன் ஆகியோா் தலைமையில் இந்த வனச்சரகத்தில... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு,தூண்பாறை,குணாகுகை, மோய... மேலும் பார்க்க