பெண் மீது தாக்குதல்: உறவினா்கள் காவல் நிலையம் முற்றுகை
கொடைரோடு அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது தாக்குதல் நடத்திவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொடைரோடு அருகேயுள்ள முருகத்துரான்பட்டியைச் சோ்ந்தவா் அமிா்தம் (50). இவா் அதே பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் புதன்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவா் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், அமிா்தத்தை தாக்கிய மா்ம நபா்களை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காவல் ஆய்வாளா் குருவத்தாய் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் அம்மையாநாயக்கனூா் காவல் நிலையத்துக்கு வழக்கமான ஆய்வுக்காக புதன்கிழமை வந்தாா். அவரிடம், பெண் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.