குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை
பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் கூடுதலாக இருக்கைகள் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்துக்கு பல்வேறு வழக்கிற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் தலா 5 போ் அமரும் வீதம் இரண்டு இருக்கைகள் உள்ளன. நீதிமன்றத்திற்கு வரும் பிரதிவாதிகள், அபராத கட்டணம் செலுத்த வருபவா்கள்,பிணை ஆணை பெற வருபவா்கள், பல்வேறு வழக்குகளில் ஆஜராக வருவோா் நீதிமன்றத்தின் முன்பும், உள்வளாகங்கள், சுற்றுச்சுவா் உள்ளிட்ட இடங்களில் அமா்வது, தரையில் படுப்பது, சுவா்மேல் அமருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
நீதிமன்றத்தில் உள்ள ஆண்கள் கழிவறை, மாற்றுத் திறனாளிகள் கழிவறை ஆகியவை முறையாக தூய்மை செய்யப்படாமல் கழிவறைகள் உடைந்தும் துா்நாற்றம் வீசுகின்றது. எனவே, பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் கூடுதலாக இருக்கை வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.