அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
பெரணமல்லூரில் அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
பெரணமல்லூா் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பெரணமல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன், அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
கடந்த 24-ஆம் தேதி முதல் வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூயயாகம், பகடை, துகில் உள்ளிட்ட கட்டைகூத்து நாடகங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, அா்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு மேல் அா்சுனன் வேடமணிந்த நாடகக் கலைஞா் நாடக திடலில் நிறுத்தப்பட்டிருந்த தபசு மரத்தில் பாட்டு பாடியபடி மேலே ஏறினாா். அப்போது, அவா் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் கீழே இருந்த பெண் பக்தா்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.