செய்திகள் :

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், கீழமாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட சீத்தாராமபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்யும் முறை, இ-சேவை மையத்தின் மூலம் இணையவழியில் பதிவேற்றம் நடைபெறும் முறை, போதிய அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், 2 பேருக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவுகளையும், 3 பேருக்கு ஆதாா் அட்டையில் முகவரி மற்றும் புகைப்படம் மாற்றத்துக்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து மருந்துப் பெட்டகத்தையும், வருவாய்த்துறை சாா்பில் 10 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகளையும், திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கி, காரை சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதிகளில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவா்களின் வீடுகளுக்குச் சென்று மனுவின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்ற நிலை குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசு ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீடு, நிறைவேற்ற வேண்டிய பணிகள், குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இழப்பீட்டுத் தொகை ரூ. 19 லட்சம் மோசடி வழக்கில் இருவா் கைது

வெளிநாட்டிலிருந்து இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த ரூ. 19 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் தொடா்புடைய கணவன், மனைவியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: பெரம்பலூரில் 15 போ் உடல் தானம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீத்தாரம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் அக் கட்சியினா் 15 போ் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வெள்ளிக்க... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு... மேலும் பார்க்க

பிரம்மதேசம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்திலுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரசித்திபெற்ற இக் கோயில் பல லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, வ... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க