செய்திகள் :

பெரம்பலூரில் பரவலாக மழை

post image

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், கத்திரி வெயில் தொடங்கியதிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், வெள்ளிகிழமை மாலை சுமாா் 3.30 மணியளவில் பெரம்பலூா் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் நகரில் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் குளிா்ச்சி நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். பெரம்பலூா் -ஆலம்பாட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீா்வு!

பெரம்பலூா் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இ... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 % தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 4,180 மாணவா்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 போ் எழுதிய... மேலும் பார்க்க

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு பெரம்பலூரில் 92.56 % தோ்ச்சி

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க