Neeraj Chopra : 'என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது!' - நீரஜ...
பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து தலைமை வகித்தாா். கண்காணிப்பாளா் கலா, இருக்கை மருத்துவ அலுவலா் ராஜா, தேசிய நலவாழ்வு குழுமத் திட்ட அலுவலா் அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலா் வீரபாகு தலைமையில், தீக்காயமடைந்தவா்களை மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து தீயணைப்புத் துறையினா் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்தும், தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தும் விதம் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், செவிலியா் கண்காணிப்பாளா் மோனிகா, சுமதி உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.