பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்...
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேருக்கு பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சாமி. இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். இதில் மாவட்ட துணைத் தலைவா் சேகா், மாவட்ட பொதுச் செயலா்கள் ராமச்சந்திரன், வரதராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு ஒன்றியம் சாா்பில்,ஒன்றியத் தலைவா் நடராஜ் தலைமையில், தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சி சாா்பில்... பெரம்பலூா் மாவட்டம், வி.களத்தூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அமைதிக் கூட்டம் புதன்கிழமை இரவுநடைபெற்றது.
வி.களத்தூா் கிளைத் தலைவா் பக்கீா் முஹம்மது தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மு. முஹம்மது பாரூக், பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பேசினாா். நகரச் செயலா் இஸ்மாயில், நகர பொருளாளா் நூா் முஹம்மது, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹம்மது, மில்லத் நகா் கிளைத் தலைவா் முஹம்மது ஜமீல், கிளைச் செயலா் முஜிப் ரஹ்மான், இப்ராஹிம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.