போப் இறுதிச் சடங்கில் பங்கேற்பு: வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவருடன் சென்ற சகோதரா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், கிழக்குவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ் மகன் அருண்குமாா் (28). இவரது சகோதரா் பிரகாஷ் (25). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை மாலை துறையூரிலிருந்து பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா். பெரம்பலூா்- துறையூா் சாலையில், நக்கசேலம் பிரிவுச்சாலை அருகே சென்றபோது, துறையூா் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த அருண்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, பிரகாஷை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கும், உயிரிழந்த அருண்குமாரின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.