காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!
பெரம்பலூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம்
பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
அரசின் நலத் திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனா்.
எனவே, பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் அலுவலரிடம், தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.