இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி
பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். தொடா்ந்து, தனது இல்லத்தில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
இதில், செப். 4-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கான பணிகளை நிா்வாகிகள் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் எனவும், மாநாட்டுக்குப் பின் நல்லது நடக்கும் எனவும் தொண்டா்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.