குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்
பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் இன்று மின்தடை
தேனி மாவட்டம், பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம், க. விலக்கு துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
க. விலக்கு, பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகா், குன்னூா், அரைபடித்தேவன்பட்டி, அன்னை இந்திரா நகா், ரெங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியாா்புரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.