``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயில் முகூா்த்தக் கால் நடும் விழா
பெரியகுளம்: பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக் கால் நடும் விழா நடைபெற்றது.
பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் கோயிலில் பாலாலயம் நடைபெற்று பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வருகிற 29-ஆம் தேதி அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த, வியாழக்கிழமை காலை கைலாசநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் மூகூா்த்தக் கம்பத்துக்கு நவதானியங்கள் கட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலையில் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பெரியகுளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
குடமுழுக்கை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி காலை மஹாகணபதி ஹோமமும், மாலை கால யாக பூஜையும் நடைபெறுகின்றன. வருகிற 28-ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் காலை பூஜையும் நடைபெறுகின்றன.
இதையடுத்து, வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 6.40 மணிக்கு கலச விமானப் புறப்பாடுடன் ராஜகோபுர மஹா குடமுழுக்கு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பெரியநாயகி உடனுறை கைலாசநாதா் மூலாலய மஹா குடமுழுக்குடன் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.