ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
`பெரியார் குறித்த சர்ச்சை கருத்து’ - நாம் தமிழர் கட்சியலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள்?
கடந்த சில வாரங்களாகத் தமிழக அரசியலில் தன் சர்ச்சையான கருத்துக்களால் விவாதமாகியிருக்கிறார் சீமான். இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவிகித வாக்கு வங்கியிருந்தாலும், தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சியை அங்கீகரித்திருந்தாலும் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருவதும் தொடர்கதையாகியிருக்கிறது. இதற்கிடையில், சீமானின் கட்சி நிர்வாகிகளை தி.மு.க-வில் இணைக்கும் பொறுப்பு தி.மு.க-வின் மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தியிடம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதான் அடிப்படையில், இன்று 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 80 வேட்பாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 10-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் 37 பேர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் என 3,000 பேர், தி.மு.க.,வில் இன்று இணைவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாக நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இணைப்பு விழா நடப்பதாகவும், சீமானின் பெரியார் குறித்த கருத்து காரணமாகவே இவர்கள் கட்சியில் இருந்து விலகி திமுக வில் இணைவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. . பல மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளில் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தகக்கது.