Ajith: `சிவாஜி கணேசன் டு அஜித்' - பத்ம விருதுகளை வென்ற தமிழ் நடிகர்கள்!
பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்
சென்னை: 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்றார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026-ல் திராவிட மாடல் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி! போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!
ஆல்ரெடி ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று வெர்ஷன் 2.0 லோடிங்காம்!
அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே வெர்ஷன் தான் - அது தமிழகத்தில் அதிமுக வெர்ஷன் தான்!
மக்கள் வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.