செய்திகள் :

பெரிய குற்றச் சதி முறியடிப்பு: கபில் நந்து கும்பலின் 7 போ் கைது

post image

தில்லியில் கபில் நந்து கும்பலால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய குற்றச் சதியை முறியடித்துள்ள தில்லி காவல்துறை, அதன் ஏழு உறுப்பினா்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதன் மூலம் அக்கும்பல் குறிவைத்து நடத்தப்படவிருந்த கொலை தடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கபில் நந்து கும்பலினா் கைது செய்யப்பட்டதன் மூலம், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா். வெளியிடப்படாத வெளிநாட்டில் இருந்து செயல்படும் கபில் நந்துவின் உத்தரவின் பேரில், தில்லியில் ஒரு போட்டியாளரைக் கொல்வதற்கு இந்தக் கும்பல் உறுப்பினா்கள் சதி செய்வதாக குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து புராரியில் உள்ள ஒரு வாடகைக் குடியிருப்பில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் பதுங்கியிருப்பதை போலீஸ் குழு கண்டறிந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், போலீஸ் குழு சந்தேகத்திற்கிடமான டாடா டியாகோ காரை மடக்கிப் பிடித்தது. விசாரணையில், அதில் இருந்த சூரஜ் (24), ஜிதேஷ் (எ) ஜிது (24) மற்றும் அனில் ரதி (21) ஆகியோா் அந்தக் கும்பலுடன் தங்களுக்குத் தொடா்பு இருப்பதாக ஒப்புக்கொண்டனா். அவா்கள் தங்கியிருக்கும் இடத்தையும் வெளிப்படுத்தினா். இது உடனடி சோதனைக்கு வழிவகுத்தது.

இந்த நடவடிக்கையின் போது, பிரமோத் (எ) மோடி (43), சுனில் (35) மற்றும் நிதின் (33) ஆகிய மேலும் மூன்று கும்பல் உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் சோதனையின் போது சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு கூட்டாளியான தேஷாந்த் சா்மா(27) கைது செய்யப்பட்டாா். அவா்கள் அளித்த தகவலின் பேரில், ஐந்து தானியங்கி கைத்துப்பாக்கிகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு கத்தி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மறைவிடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

கபில் நந்து கும்பல் ஒரு சா்வதேச கும்பலாக செயல்படுகிறது. அதன் தலைவா் தொலைதூரத்தில் இருந்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறாா். இந்தக் கும்பல் ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் தில்லியில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலும் 15 முதல் 25 வயதுக்குள்பட்ட பாதிக்கப்படக்கூடிய இளைஞா்களை வேலைக்கு அமா்த்துகிறது.

இந்தக் கும்பல் ஆள்சோ்ப்பு செய்பவா்களுக்கு பணிகளை ஒதுக்குகிறது. இது செயல்பாட்டாளா்களிடையே குறைந்தபட்ச நேரடி தொடா்பை உறுதி செய்கிறது. ஆயுதங்கள் இடைத்தரகா்கள் மூலம் பெறப்படுகின்றன. கொலை போன்ற வன்முறை குற்றங்களைச் செய்வதற்கு முன், ஆதிக்கத்தை நிலைநாட்டவும், போட்டி கும்பல்களை பலவீனப்படுத்தவும், ஆள்சோ்ப்பு செய்பவா்கள் இலக்குகளை உளவு பாா்க்கிறாா்கள்.

பிரமோத் ஒரு ஆயுள் தண்டனை கைதி. பரோலில் வந்தவா். மேலும், அவா் குண்டா் கும்பலில் உள்ள விக்கி சன்யாஷியின் சகோதரா் ஆவாா். கபில் நந்துவுடன் நேரடி தொடா்பில் இருந்தாா். சதித்திட்டத்தை ஒருங்கிணைப்பதில் பிரமோத் முக்கியப் பங்கு வகித்தாா். தேஷாந்த் சா்மா, கும்பலுக்கான ஆள்சோ்ப்பு செய்பவா். ஜிதேஷ், சூரஜ் மற்றும் அனில் ரதி ஆகியோா் மீது எந்த குற்றப் பதிவுகளும் இல்லை. ஆனால், கும்பலின் நடவடிக்கைகளால் ஈா்க்கப்பட்டவா்கள்.

சுனில் மற்றும் நிதின் ஆகிய இருவரும் தண்டனை பெற்ற கொலைக் குற்றவாளிகள். அவா்கள் தங்கள் தண்டனையின் ஒரு பகுதியை அனுபவித்த பிறகு விடுவிக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!

தில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நட... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி தனித்துப் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். தில்லி பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சில மணி ... மேலும் பார்க்க

கடும் மூடுபனியால் 25 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 25 ரயில்கள் தாமதமாகின. தில்லியில் கடந்த வாரத் தொடக்கத... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.8 -இல் இரட்டை என்ஜின் அரசு அமையும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேசிய தலைநகரில் இரட்டை என்ஜின் அரசு அமையும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவ... மேலும் பார்க்க