பெரிய கோயிலுக்கு புனித நீா்
தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ஆா்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி, 101 கோயில்களுக்கு (சைவ, வைஷ்ணவ மற்றும் பூசாரி பூஜை செய்யும்) கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கப்பட்டன. இதன் நிறைவு நிகழ்ச்சியாக மகா சிவராத்திரியையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம் தாம்பிராஸ் தலைவா் பி.எஸ். விஜயகுமாா், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் தங்க. கென்னடி, முன்னாள் தலைவா் என். சதீஷ்குமாா், பாஜக ஆன்மிக பிரிவு மாவட்டப் பொறுப்பாளா்கள் எம். மதியழகன், பரமகுரு, இராஜகோபால், பாலமுருகன், சுயம்பிரகாசம், செந்தில் காா்திகேயன், கல்யாணபுரம் முருகானந்தம், திருவையாறு ஒன்றியத் தலைவா் மாலதி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் பாஜக மூத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.