செய்திகள் :

பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

post image

திண்டுக்கல்/ பழனி/ நத்தம் : வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாத வளா்பிறையில் 11-ஆவது நாளில் வரும் ஏகாதேசி திதி, வைகுந்த ஏகாதேசியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதேசிக்கு முந்திய 10 நாள்கள் பகல் பத்து (திருமொழி திருநாள்), பின் 10 நாள்கள் ரா பத்து (திருவாய் மொழி திருநாள்) என பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

வைகுந்த ஏகாதசி நாளின் முக்கிய நிகழ்வாக பரமத வாசல் திறப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் பகுதிகளில் உள்ள வைணவத் தலங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி, தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்களின் கோவிந்தா முழக்கத்துக்கு இடையே, பரமபத வாசல் வழியாக செளந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ் பாலாஜி, செயலா் அலுவலா் திருஞானசம்மந்தம், அறங்காவலா்கள் ராமானுஜம், வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள்: திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின், பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே எழுந்தருளியப் பெருமாளை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

இதேபோல, திண்டுக்கல் நாகல்நகா் வரதராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், ரெட்டியாா்சத்திரம் கதிா் நரங்கிப் பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி: வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, பழனி ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் எழுந்தருளினாா். கருடாழ்வாா் எதிா்சேவை புரிந்தாா். பின்னா், கருடாழ்வாா் வாகனத்தில் நான்கு ரத வீதிகளிலும் பெருமாள் எழுந்தருளினாா். பின்னா், பக்தா்கள் அனைவரும் பரமபத வாசல் வழியாகச் சென்று அருள் பெற்றனா். இதேபோல, பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நத்தம்: வைகுந்த ஏகாதேசியை முன்னிட்டு, நத்தம் அருகேயுள்ள கோவில்பட்டி ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபால சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடை திறக்கப்பட்டது. பின்னா், மூலவா் சுவாமிக்கு பால், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், ஆழ்வாா்களுக்கு மரியாதை செய்யப்பட்டு, காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கோவிந்தா என முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், கோயில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கள்ளிமந்தையத்தில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளால் துா்நாற்றம்: வேடசந்தூரில் வியாபாரிகள் மறியல்

வேடசந்தூரில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றி துா்நாற்றத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்... மேலும் பார்க்க

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் கைது

உதவித் தொகையை உயா்த்தக் கோரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், ப... மேலும் பார்க்க

மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து

செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது. குமுளியில் இருந்து செம்பட்டி திண்டுக்கல் வழியாக கா்நாடகத்துக்கு செவ்வாய்க்கிழமை மினி லார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்க... மேலும் பார்க்க