ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
பெருவங்கூா் ஏரியில் பெண் சடலம்
கள்ளக்குறிச்சியை அடுத்த பெறுவங்கூா் ஏரியில் புதன்கிழமை மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் ஏரியில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் ரெஜினா பேகம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதையடுத்து, அங்கு சென்ற கள்ளக்குறிச்சி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.