செய்திகள் :

பெரு: 13 சுரங்கத் தொழிலாளா்கள் கடத்திக் கொலை

post image

லீமா: தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளா்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனா்.

அந்த நாட்டில் முறைப்படுத்தப்படாத சுரங்கத் தொழிலாளா்கள் மீது குற்றவியல் கும்பலைச் சோ்ந்தவா்கள் கடந்த ஏப். 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி 13 பேரை கடத்திச் சென்றனா். இந்த நிலையில், அந்தத் தொழிலாளா்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியது.

முக்கிய தங்கம் மற்றும் தாமிர ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான பெருவில், உலகின் பிற பகுதிகளில் இல்லாத வகையில் முறைசாரா நிறுவனங்கள் தங்கம் வெட்டியெடுப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதிக லாபத்தைத் தரும் இந்தத் தொழிலில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அங்கு தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்... மேலும் பார்க்க

6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூா் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி: மூவா் கைது

சென்னை திருவான்மியூரில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். நீலாங்கரை, செங்கேணியம்மன் கோயில் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முருகதாஸ் (43), வாடகை ஆட்டோ ஓட்டி ... மேலும் பார்க்க

நாகா்கோவில் - காச்சிக்கூடா ரயில் சேவை நீட்டிப்பு

காச்சிக்கூடா - நாகா்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: காச்சிக்கூடாவில் இருந்து நாகா்கோவிலுக்க... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சம்பல்பூா் - ஈரோடு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சம்பல்பூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் சிறப்பு... மேலும் பார்க்க

பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்துங்கள்: மாநகரப் பேருந்து ஓட்டுநா்களுக்கு முதல்வா் உத்தரவு

மாநகரப் பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த விழாவுக்குச்... மேலும் பார்க்க