இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்
திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழாவின் முதல்கட்டமாக, 61 ஆண்டு பழமைவாய்ந்த ராதா கிருஷ்ணா் புகைப்படங்கள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு அஷ்டபதி பஜனை நடந்தது.
இதையடுத்து வேத மந்திரங்கள்முழுங்க, ராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. இதில் பெல் வளாக பொதுமக்களும், பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பெல் வளாகத்தில் உள்ள மனவளா்ச்சி குன்றிய அறிவாலய பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது.