பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜம்மு - காஷ்மீா் மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற பயணிகளை பெஹல்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தியும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி நிா்வாகத்தினருடன் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், 3,000 மாணவிகள் புதன்கிழமை பிற்பகல் கல்லூரி வளாகத்தில் கூடி பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி ஏற்றனா்.