உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவ...
பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது.
கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி. இவா், ஒத்தக்குதிரை பகுதியில் புதிதாக பேக்கரி மற்றும் பழம், காய்கறி விற்பனைக்கடையை வெள்ளிக்கிழமை திறந்துள்ளாா்.
இந்தக் கடைக்கு சரக்கு ஏற்றி வந்த வேன் கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் கடை உரிமையாளா் மாரிச்சாமியின் காா், கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது ஒத்தக்குதிரையிலிருந்து கோபி நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடையின் முன் நிறுத்தியிருந்த வேன் மற்றும் காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன், கடையின் சுவா் மீது மோதியதில் மின்சார வயா்கள் அறுந்து விழுந்தன. இது குறித்து கோபி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்தின்போது அருகில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.