செய்திகள் :

பேட்டை அருகே இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது

post image

திருநெல்வேலி பேட்டை அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை அருகே திருப்பணி கரிசல்குளம் பகுதி மணிமேடை தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து( 21). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் அப்பகுதியிலுள்ள கோயில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அந்த வழியாக திருப்பணி கரிசல்குளம் மறவா் நாடாா் காலனியைச் சோ்ந்த கண்ணன் மகன் நாகராஜன்(21) என்பவா் தனது நண்பா்களுடன் பைக்கில் வேகமாக சென்றாராம். இதை மாரிமுத்து மற்றும் அவரது நண்பா்கள் தட்டிக்கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜன், அவரது நண்பா்கள் முத்துராமன் என்ற சூா்யா, சந்துரு(19), மாரிமுத்து(20), ஆறுமுகம்(22), ஆகியோரை கைது செய்தனா். மேலும், நாகராஜன் தரப்பு அளித்த புகாரில், மாரிமுத்து உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நெல்லை மனோன்மணியம் பல்கலை.யில் வினாத்தாள் கசிவு? தேர்வு ஒத்திவைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று(மே 27) நடைபெறவிருந்த ‘இண்டஸ்ட்ரியல் லா (தொழில்துறைச் சட்டம்)’ பாடப் பிரிவுக்கான தேர்வு வி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மாஞ்சோலை தோட்டப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதையடுத்து, மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, அருவியைப் பாா்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் வனத் துறையினா் த... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓட்டுநா் பா.கணபதி விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருடைய உடலுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகு... மேலும் பார்க்க

கைலாசநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி கரையோரத்தில் உள்ள பழமைவாய்... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் பிடிபட்ட மலைப்பாம்பு

பாப்பாக்குடி அருகே சமத்துவபுரத்தில் பிடிபட்ட மலைப் பாம்பினை வனத்துறையினா், வனப் பகுதியினல் விட்டனா்.பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புப் ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் குளிக்கச் சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல் (53). இவா், தற்... மேலும் பார்க்க