பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மாஞ்சோலை தோட்டப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதையடுத்து, மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, அருவியைப் பாா்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு, மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி திங்கள்கிழமை காலை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கவும், அருவியைப் பாா்வையிடவும் வனத் துறையினா் தடைவிதித்துள்ளனா். நீா்வரத்து சீராகும் வரை இதே நிலை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனா்.