சேரன்மகாதேவியில் குளிக்கச் சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல் (53). இவா், தற்போது ராமையன்பட்டியில் வசித்து வந்தாராம். இந்நிலையில் சக்திவேல், திங்கள்கிழமை சேரன்மகாதேவியில் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றாராம். அப்போது மயங்கி விழுந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனராம். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சக்திவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இறந்த சக்திவேலுக்கு, மனைவி ஆனந்தி, 3 மகன்கள் உள்ளனா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.